Oct 1, 2008

உளறல்-2

ஒரு சாதாரண விஷயமாக இல்லாமல் அதன் ஒவ்வொரு வடிவத்திலும் ஒரு முக்கியத்துவத்தை கொண்டு நடைபெறுகிற மனித வாழ்க்கையின் குறைபாடுகளை மறந்தால்தான் மனித ஜீவிதம் இயல்பையும் நிம்மதியையும் அடையும்.

தவறு செய்யாத மனிதர்கள் மட்டுமே நமக்கு உறவாக நட்பாக இருக்கமுடியும் எனபது போல ஒரு கொள்கை எல்லா மனிதர்களிடமும் உள்ளது, அது எப்படி சாத்தியம் என்கிற மனநிலை வருவதில்லை, அவன் என்னை திட்டிவிட்டான் மிக மிக மோசமாக அதனால் அவனுடன் நான் பேசப்போவதில்லை இனி அவனுக்கும் எனக்குமான உறவுகள் முறிந்து விட்டன என்பது போன்ற எண்ணங்கள் நிறைய மனிதர்களிடம் நான் கண்டிருக்கிறேன்.

வாழ்க்கை என்பது எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பது மாதிரி மிக நீண்ட பிரயாணம் அல்ல ஒரு மனிதன் 90 வயது வரை வாழ்கிறான் என்று வைத்துக்கொண்டால் அவனின் வாழ்நாளை இப்படி பிரிக்கலாம்

1.குழந்தைப்பருவம் 0 முதல் 5 வயதுவரை இதில் அவன் எந்த பெரிய பாதிப்பையும் பிறருக்கு தரப்போவதில்லை
2.இளமைப்பருவம் 5 முதல் 30 வயது வரை இதில் அவன் எதிர்கால திட்டங்களையும் படிப்பையும் கொண்டு காலம் செல்கிறது இந்த காலத்தில் அவன் தன் கடுமையான முடிவுகளை எடுக்க முடிவதில்லை அல்லது பெற்றோரின் பாதுகாப்பில் இருக்கிறான்.
3.திருமண வாழ்க்கை பருவம் 30 முதல் 60 வரை இதுதான் மிக முக்கியமாக சொந்த முடிவுகளை எடுக்கும் பருவம் இதைப்பற்றிதான் இந்த கட்டுரை அதனை கீழே விவரமாக பார்க்கலாம்.
4.முதுமைப்பருவம் 60 முதல் 90 வரை இதுவும் சுய முடிவுகள் அல்லாத பிள்ளைகளுக்காகவும் வயோதிகத்துக்காகவும் மலரும் நினைவுகளோடும் போகும் பருவம்.

இந்த மாதிரியான பகுப்பில் மூன்றாவது பருவம் தவிர மற்ற பருவங்கள் பெரிய பாதிப்புகளை உண்டாக்குவதில்லை, நான் பாதிப்பென்று சொல்வது அவனின் நடவடிக்கையால் மற்றவர்களுக்கும் அவனுக்கும் உண்டாகும் இழப்புகளை சொல்கிறேன்.

மூன்றாவது பருவத்தை இப்படி பிரிக்கலாம்.

ஓய்வு நேரம் 2. உறங்கும் நேரம் 3. மற்றவர்களுடன் பழகும் நேரம் 4.குடும்பத்துக்கான நேரம் 5.உழைக்கும் நேரம்.

ஓய்வு நேரம் காலையும் மாலையும் மொத்தம் 2 மணிநேரம் அதாவது குளித்தல் சாப்பிடுதல் தயாராதல் பேப்பர்படித்தல் கடிதம் எழுதுதல் மற்ற தன்னைசார்ந்த பணிகள். அதாவது 30 வருடத்தில் 12 ல் ஒரு பங்கு 2.5 வருடம்
ஒரு நாளைக்கு சுமார் 8 மணிநேரம் உறக்கம் என்று கொண்டால் 30 வருடத்தில் மூன்றில் ஒருபங்கு நேரம் 10 வருடம்.
மற்றவர்களுடன் பழகும் நேரம் ( கடைசியில் பார்ப்போம்)
குடும்பத்துக்கான நேரம் தினசரி குழந்தைகளுடன் செலவிடுவது மனைவியுடன் செலவிடுவது என்றால் 4 மணிநேரம் அதாவது 5 வருடம்.
உழைக்கும் நேரம் தினசரி 8 மணிநேரம் என்று கொண்டால் மூன்றில் ஒரு பங்கு அதாவது 10 வருடம்

இப்போது மொத்தம்

1.ஓய்வு நேரம் ---------------------2.5 வருடம்
2.உறக்கம் --------------10 வருடம்
4.குடும்பத்திற்கான நேரம்--------5 வருடம்
5.உழைக்கும் நேரம் -------------10 வருடம்

கிட்டத்தட்ட 27.5 வருடம் இப்படிப்போகிறது அதில் வெறும் 2.5 வருடம் மட்டுமே நாம் மற்றவர்களுடன் பழக ஒதுக்குகிறோம் இதில்தான் எத்தனை கருத்து வேறுபாடுகள் சண்டைகள் கலகங்கள் கவலைகள். இதனால் எல்லோருடைய நிம்மதியும் அல்லவா கெடுகிறது சற்று சிந்தித்துப்பாருங்கள் வாழ்க்கை மிகசிறியது அதில் ஏன் மாச்சர்யங்கள். எந்த சண்டையும் ஒரு தற்காலிகமானது என்று எண்ணுங்கள், அடுத்தநாளே அந்த மனிதரிடம் பேசுங்கள் குறைகள் இல்லாத மனிதரே இந்த உலகில் இல்லை உங்களுடைய குறைகளுடனே உங்களை ஏற்றுக்கொள்ள சுற்றியுள்ளவர்கள் தயாராக இருக்கும்போது நீங்கள் ஏன் அவர்களை குறையில்லாமல்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்.

உங்கள் பிடிவாதத்தால் உங்கள் தாய், மனைவி, சகோதரன் சகோதரி குழந்தைகள் என்று எத்தனை பேர் தங்கள் சந்தோஷங்களை இழக்கவேண்டியுள்ளது, அதற்கு நீங்கள் சொல்லும் பதில் நான் அவர்களை வேண்டாம் என்று சொல்லவில்லையே என்பது, எண்ணிப்பாருங்கள் 5 பேர் உள்ள இடத்தில் ஒருவர் மட்டும் பேசாது இருந்தால் அது 5 பேரையும்தானே பாதிக்கும். தவறுகளை மறங்கள் அதனை சுமந்து கொண்டிருப்பதால் எந்த பயனும் யாருக்கும் இல்லை.

கன்பூசியஸ் சொல்கிறார்:

தவறுகளை மீண்டும் மீண்டும் சிந்தித்து குற்றங்களாக்கி விடாதீர்கள் அது வெறும் தவறுதான் அதனை அப்போதே மறங்கள். அது உங்களை நிறைய காலம் மகிழ்ச்சியாய் வைத்திருக்கும். தண்டனைகள் திருந்துவத்ற்குதானே ஒழிய காயப்படுத்துவதற்கல்ல,

ஆனால் நீங்கள் பேசாமலும், சாப்பிடாமலும் முகம் கொடுக்காமலும் தருகிற தண்டனைகள் வெறும் காயத்தைதான் ஏற்படுத்துகிறது. முக்கியமாக பெற்றோர்கள், அவர்கள் உங்களுக்காகவே வாழ்ந்து காத்திருபபவர்கள் அவர்களை எந்த பிரதிபலனாலும் உங்களால் சரிசெய்ய முடியாது ஆகையால் அவர்களின் நடவடிக்கைகளில் குற்றம் காணமுயலாதீர்கள், ஏனனில் அவர்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட தெய்வங்கள்.
---செல்வன்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்