Oct 13, 2011

குருபூஜை விழா அழைப்பிதழ்படத்தை கிளிக்கினால் பெரிதாக படிக்கலாம்

Oct 3, 2011

தளங்களில் நான் எழுதிய கருத்துக்கள்

காந்தி தனது போராட்டங்களின் விளைவுகளை அறியாமலே முன்னெடுத்தார் என்பது உண்மையாக இருக்காலம், எந்த போராட்டவாதியும் விளைவுகளை முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் காந்திஜியிடம் எந்த விளைவானாலும் தனது உயிரை பணயம் வைத்தாவது அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் செளரி செளரா வன்முறையின்போது ஓத்துழையாமை இயக்கத்தை அவரால் நிறுத்த முடிந்தது.
காந்தியைத்தவிர மற்ற தலைவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திரப்போராட்டத்தை கடைசி இந்தியன் வரை கொண்டு செல்லும் சக்தியில்லை, ஆகையால்தான் சுதந்திரம் உறுதியாகும் வரை காந்தியை புறக்கணிக்கமுடியாத நிலையில் இருந்த தலைவர்கள், பிரிவினையின் போது அவரை கருவப்பில்லை போல வெளியே கடாசிவிட்டனர். அப்போது அவர்களுக்கு காந்தியும் தேவைஇல்லை அவருடைய மக்களும் தேவை இல்லை. தத்தமது அதிகார தேவைகளுக்காக எல்லா சமரசங்களும் நடந்தன.
பிரிவினையை தவறு என்றோ சரி என்றோ இங்கே நான் சொல்லவில்லை, ஆனால் காந்தியை அப்போது யாருக்கும் தேவைப்படவில்லை என்பதைதான் நான் இங்கே கூறுகிறேன். காந்தி மக்களுடன் இணைந்த தலைவராக மட்டுமே கருதப்பட்டார், நிர்வாக ரீதியான விஷயங்களுக்கு அவர் பொருத்தமில்லாதவராக பார்க்கப்பட்டார், அதனால்தான் அவரின் பொருளாதார கொள்கைகள் கூட சரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இப்போது கபில்சிபல், அன்னா ஹசாரேவின் எண்ணங்கள் நிர்வாகத்திற்கு சாத்தியமில்லை என்று மீடியாக்களிடம் எல்லாம் கூறிக்கொண்டிருக்கும்போது. மக்கள் கூட்டம் என்னவோ அன்னா ஹசாரே பின்னாடி நின்ற அதே கதைதான் காந்தியிடமும் நடந்தது, வழக்கமான இந்திய மக்களின் பூஜிக்கும் மனநிலை காந்தியையும் அப்படி ஒரு நிலையில் கொண்டுவந்து வைத்தது.
சொல்லும் செயலும் எண்ணமும் ஓன்றாக ஒரு மனிதனால் வாழ்ந்து காட்டமுடியும் என்ற நிருப்பித்தவர் காந்தி, அது அவருக்கு வெற்றிகளை கொடுத்தது என்பதுதான் வரலாறு, அதனால்தான் இன்னும் அவர் இங்கே விவாதத்தில் இருக்கிறார். காந்தியை திட்டுபவர்கள் விமர்சிப்பவர்கள் எல்லாம் அவரின் முஸ்லீம்கள் மீதான பற்றினை ஒரு குறையாக காட்டுவது அதிகம், எனக்கென்னமோ ஒரு சாதாரண மதசார்ந்து யோசிக்காத மனிதனுக்கு கூட காந்தியின் உணர்வே வரும் என்றுதான் தோன்றுகிறது. அப்படி இருக்கையில் இந்தியாவின் தந்தையான ஒரு தலைவர் எப்படி தன்னாட்டில் உள்ள எல்லா மத்ததினரையும் சமமாக பாவிக்காமல் இருக்கமுடியும்.
ஒருவேளை சுதந்திர இந்தியாவில் அவர் நீண்டகாலம் இருந்திருந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்க கூடும்.
*********************************************************************************************************************
எல்லா மதங்களும் நீண்ட காலமாகவே ஒரு வித மறுமலர்ச்சி நிலைகளை அடைந்து கொண்டேதான் வந்திருக்கிறது, அதன் விளைவுகள்தான அதனில் தோன்றிய புதிய புதிய பிரிவிகள், பிரட்டஸ்டண்டுகளும் ஆர் சி கிருத்துவர்களும் தனித்தனியே விவாதிக்கும்ப்போது ஏற்படும் தீப்பொறி, இஸ்லாத்தின் சன்னி மற்றும் ஷியா பிரிவினரிடமும், இந்து மதத்தில் சிவா வைஷ்ணவா விவாதங்களிலும் பற்றி எரியத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் திரவிடம் வந்ததால் ஏற்பட்ட ஒரு மாற்றம் இப்போது இல்லாமல் போய்விட்டதால்தான் கருணாநிதியே இன்னும் மஞ்சள் துண்டுடன் இருக்கிறார், அவர் குடும்பத்தினர் கோயில்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை அறிவியல் வளர்ந்த நாடுகளிலும், சோற்றுக்கே வழி இல்லாத நாடுகளிலும் கடவுளும் மதமும் எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லை, நடுத்தர உலக நாடுகளில்தான் இன்று மதம் கடவுள் பற்றிய பயம் இன்னும் மிச்சமிருக்கிறது. இது ஒருவகை middle class mentality, இந்திய வாக்களார்களைப்போல உலகிலும் இந்த நடுத்தர வர்க்கம் அதிக எண்ணிக்கையில் உள்ள வரை அவர்கள் சார்ந்த சம்பவங்கள் வாழும், பலப்பல வேஷங்கள் கட்டி, அவ்வளவுதான்.