எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியது.
1) பின்னவீனத்துவம் ஒரு பொருளை,கருத்தை நேர்க்கோட்டில் விளக்கிச் சொல்லாது.
2) ஆசிரியர் ஒரு பொருளைப் பற்றி எழுதுகிறார்.அதை அவருடைய சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறார்.வாசகரும் அவ்வாறே அவரவர் எண்ணங்களுக்கு ஏற்றபடி புரிந்து கொள்ளலாம்.
3) ஒவ்வொருவரும் தனது எண்ணங்களுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ளமுடியும் என்பதால்,ஆசிரியர் ஒரு படைப்பை வெளியிட்டவுடன் அவருக்கே அதன் மீதான உரிமை போய்விடுகிறது.அந்தப் படைப்பு சமூகத்திற்கானதாகி விடுகிறது.
'பின்னவீனத்துவம்' என்கின்ற வார்த்தை Postmodernism என்ற ஆங்கில வார்த்தையின் நேரடி மொழி பெயர்ப்பாகத் தெரிகிறதே தவிர, சரியான ஒரு தமிழ் சொல்லாக எனக்குத் தோன்றவில்லை! இந்த கருத்தை புரிந்தவர்கள் நம் தமிழ் படைப்புகளில் இருந்து மேற்கோள்கள் காட்டி இந்த வார்த்தையையும் அதன் பொருளையும் எளிதாக விளங்க வைக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!
ReplyDelete