Mar 12, 2011

ஜப்பானில் பயங்கர சூழல்



ஜப்பானில் பயங்கர சூழல் பூகம்பங்கள், சுனாமி, அணுமின்நிலையம் வெடித்தது இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன, நண்பர் முருகவேல் அங்கிருக்கிறார், நேற்று தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை. எங்கும் மின்சாரம் இல்லை, இன்று காலை மீண்டும் தொடர்பு கொண்டேன் தொடர்பு கிடைத்தது. அவர் போனில் சொன்னது அப்படியே.

நான் 25ம் மாடியில் இருந்தேன் பூகம்பம் தொடங்கியவுடன் பக்கத்து கட்டடங்கள் சினிமாவில் ஆடுவதுபோல் ஆடத்தொடங்கின, முதலில் வழக்கமான சின்ன பூகம்பம் என்று நினைத்து சிர்த்துக்கொண்டிருந்த ஜப்பானியர்கள் ஆட்டம் அதிகமாக தொடங்கியதும் புரியாமல் பதற்றத்துடன் அழத்தொடங்கி இருந்தனர், நானும் எனது நண்பரும் அடுத்த 5ம் நிமிடத்தில் தரைத்தளத்தை எட்டி இருந்தோம் வரும் வழியெல்லாம் மனிதர்கள் புரியாமலும் செய்வதறியாமலும் ஓடிக்கொண்டிருந்தனர்.



எனக்கு ஓடி வந்த ஓட்டத்தில் காலெல்லாம் பயங்கர வலி. 15 கிமீ நடந்தே வீடு வந்தேன். நான் இருப்பது டோக்கியோ என்பதால் சுனாமி தாக்குதல் பகுதியில் இருந்து சுமார் 350 கிமீ தொலைவு என்பதால் வெள்ள பாதிப்பு இல்லை.
இன்று காலை கடைகளில் உணவுப்பொருட்கள் எதுவும் இல்லை, இன்று காலை கடுமையான வெடிசப்தத்துடன் ஒரு அணுமின் நிலையம் வெடித்துள்ளது. என்ன நடக்கும் என்று புரியவில்லை. என்றாலும் இன்று மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணையம் செயல்படத்தொடங்கி இருக்கிறது.

வீட்டில் இருந்த அரிசியை மின் அடுப்பில் வேகவைத்து சாப்பிட்டதாகவும், இந்தியர்கள் நாளை முதல் விமானசேவை மீண்டும் தொடங்குவதால் நாட்டுக்கு திரும்ப முயல்வதாகவும் கூறினார்.

1 comment:

  1. இயற்கையின் புரிந்துகொள்ளமுடியாத நிகழ்வுகளில் மனிதன் வாழ்வு சீரழிகிறது. ஜப்பானில் உள்ள எல்லோரும் அழிவிலிருந்து மீண்டுவர, பிரார்த்திப்போம்.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்