படத்தில் கிளிக்கினால் பெரிதாக பார்க்கலாம்
சுமார் 1,37,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தான் போன முறை மோகன் வெற்றி பெற்றுள்ளார், ஆனால் அப்போதைய கூட்டணி பலம் பார்க்கும் போது இந்த வெற்றியின் அளவு புரியும்,
திமுக அதிமுக போக சிபிஎம் ன் ஓட்டுக்கள் அதிகம் உள்ள தொகுதி, கூடவே காங்கிரஸ் கட்சிக்கும் ஓரளவு ஓட்டுக்கள் உள்ள தொகுதி.
இதில் இப்போது திமுக கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் அதிமுகவுடன் உள்ளன, அந்த 1,37,000 ஓட்டுக்கள் இந்த கூட்டணி மாற்றத்தால் அதிமுகவுக்கு சாதகமாக விழ நேர்ந்தால் அது அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும், அதே நேரம் மு.க அழகிரி தனது தேர்தல் அனுபவத்தால் அந்த ஓட்டுக்களை தனக்கு சாதகமான நிலையில் திருப்பகூடியவராக இருப்பதால் இந்த தேர்தல் புதிய பதிலைத்தரலாம், அதே நேரத்தில் தேமுதிகவின் ஓட்டுக்கள் கணிசமான எண்ணிக்கையில் கடந்த இரண்டு இடைத்தேர்தலிலும் நிருபிக்கப்பட்டுள்ளன, அதன் பாதிப்பும் இந்த முறை பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்,
ஓட்டு போடுவது நமது கடமை என்பதை சரியாக சொன்னீர்கள் , ஆனால் சில பேர் கடமைக்கு எதிலாவது ஓட்டு போட்டு விட்டு வந்துவிடுகிறார்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுயமாக தெரிவு செய்யவேண்டும், அப்படி தெரியவில்லை என்றால் யாரயாவது கேட்டு, நம் தொகுதிக்கு நல்லது செய்யும் தகுதி யாருக்கு இருக்கு என்பதை சரியாக தேர்ந்து எடுத்து ஓட்டு போட்டார்கள் என்றால் நன்றாக இருக்கும். ஆனால் நாட்டுக்கு நல்லது செய்யும் மேலிடத்தை தேர்ந்து எடுக்கும் பொழுது, தொகுதிக்கு நல்லது செய்பவரை மட்டும் தேர்ந்தெடுத்தாலும் குழப்பம்தான்.
ReplyDeleteஅன்புடன் ஜீவா