Dec 6, 2008

துணுக்குகள்

நல்ல முடிவுகள்,அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால்
அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

ஒரு நொடி துணிந்தால்
இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும்
துணிந்தால் நாம்
ஜெயித்து விடலாம்.

மிகவும் நேர்மையாக
இருக்காதீர்கள்;
ஏனெனில் நேரான மரங்கள்
முதலில் வெட்டப்படும்;

நேர்மையானவர்களே
முதலில்
பழிதூற்றப்படுவார்கள்.

கொஞ்சம் வளைந்து
கொடுங்கள். வாழ்க்கை,
லகுவாய் இருக்கும்.

நர்சரி பள்ளி ஒன்றின்
உணவறையில் ஒரு கூடை
நிறைய ஆப்பிள்கள்
வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல்,
"ஒன்றுக்கு மேல்
எடுக்காதீர்கள்;
கடவுள்
பார்த்துக்கொண்டிருக்கிறார்"
என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு
பெட்டி நிறைய
சாக்லேட்டுகள்
வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட்

பெட்டியின் மீது ஒரு
குழந்தை பின்வருமாறு
எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ
எடுத்துக்கொள்ளுங்கள்;
கடவுள், ஆப்பிளைப்
பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

2 comments:

  1. ஒரு நொடி துணிந்தால்
    இறந்துவிடலாம்.
    ஒவ்வொரு நொடியும்
    துணிந்தால் நாம்
    ஜெயித்து விடலாம்
    இந்த வரிகள் மிகவும் அற்புதம்

    ஜீவா

    ReplyDelete
  2. நன்றி ஜீவா, நீங்கள் எழுத தொடங்கி விட்டீர்கள் என்பது மிகவும் மகிழ்சியை தருகிறது

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்