Dec 23, 2010

நந்தலாலா


இந்த படத்தைப்பற்றி பல பதிவர்கள் எழுத்தாளர்கள் எழுதி தள்ளிவிட்டார்கள், நான் இப்போதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு தோன்றியதை எழுதிவிட தோன்றுகிறது, இதில் பல காட்சிகள் ஆழமான உணர்வுக்கு இழுத்துச்செல்கின்றன, இளையராஜாவின் இசை சிலரால் விமர்சிக்கவும் பலரால் பாராட்டவும் பட்டிருக்கிறது. கடைசியில் பாஸ்கர்மணி தனது தாயை சந்திக்கும் இடத்தில் இளையராஜவின் குரலில் ஒருபாடல் துவங்குகிறது (தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்) இந்த பாடல் இந்த இடத்துக்கு பொருத்தமானதா? கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு ஒரு அழகான தாயிடம் சந்தோஷமாக ஒரு குழந்தை விளையாடும் காட்சியை கற்பனை செய்துகொண்டு இந்த பாட்டைக்கேட்டால் அப்படியே பொருந்துகிறது. பின்னர் ஏன் இந்த பாடல் இந்த காட்சியில் சேர்க்கப்பட்டது என்று புரியவில்லை.

“சேது” படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது, கேமரா, சேது சேர்க்கப்படப்போகும் மனநலம் குன்றியவர்களின் விடுதி ஒன்றினை காண்பிக்க தொடங்கும்போது, அப்போது ஒரு பின்னனி இசை வரும், அப்படியே நமது அடிவயிறு குலுங்கும், இதை உண்டாக்கியதும் இளையராஜாதான், “நான் கடவுள் படத்தில் வரும் பிச்சைப்பாத்திரம் பாடல் கூட ஒரு சுகமான சூழலுக்கு பொருந்தும் பாடல்தான். அங்கேயும் இந்த பொருந்தாமை இருந்ததாக உணர்ந்தேன், சாரு எழுதியதும் கூட இதனால்தான் என்று தோன்றுகிறது.
சாரு கூறியிருக்கும் கிம்டுகிக்கின் spring summer fall winter படத்தில் கல்லை கட்டிக்கொண்டு மலைமேல் ஏறும் காட்சியில் வரும் இசையைக்கேட்டேன், அதன் உணர்வுகள் மிகவும் அபூர்வமாக இருந்தது, அந்தப்படத்தின் முழு இசையும் அப்படித்தான் இருக்கிறது.

அந்த இசை
மேலே உள்ள தொடர்பில் அந்த இசை இருக்கிறது. கேட்டுப்பாருங்கள்.

சினிமா பார்ப்பதில் ஒரு அற்புதமான உணர்வு விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம். அம்மா மற்றும் பல துயரகாட்சிகளுக்கு இளையராஜா அவர்களின் குரலில் உண்டான பாடல்களைக்கேட்டு அதையே சோக உணர்வாக உணரக்கூடிய நிலைக்கு நாம் போனதால் அதையே எல்லா இயக்குனர்களும் கேட்டு அவரை அங்கே பாடவைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

நேற்று Asianet தொலைக்காட்சியில் idea star singer season -5 ல் அதன் நடுவர் சரத் அவர்கள் ஒரு விஷயம் சொல்கிறார் தமிழில் வந்த “சிறைச்சாலை” (மோகன்லால், தபு நடித்தது) படத்தில் வரும் “செம்பூவே” பாடல் பற்றி கூறும்போது இளையாராஜா என்ற மனிதர் உலகில் இசையை ரசிக்கும் எல்லோருக்கும் ஒரு அனுக்கிரகம் என்று. அனுக்கிரகம் என்றால் மலையாளத்தில் ஆசிர்வாதம் என்று பொருள்.இப்படி ஒரு அற்புதமான ஒரு சாதனை அல்லது சகாப்தம் என்று கூறும் அளவுக்கு சிறந்த இளையராஜா அவர்கள் நிச்சயமாக இதை தன்விருப்பத்திற்கு செய்திருக்கமாட்டாரோ என்று தோன்றுகிறது.

இந்தப்படத்தில் கதாநாயகி தன் கதையை விவரிக்கும் இடத்தில் உள்ள வசனம் மிக நேர்த்தியானதாக எனக்கு தோன்றியது “ புது சரக்குன்னு புது சரக்குன்னு மூனுநாள்ல என்ன முப்பத்தாறுபேறு மோந்து பார்த்தாங்க அதுக்கப்புறம் நான் எண்ணல” மிகுந்த வலியை ஏற்படுத்தியது. படம் முழுக்க நமது மனதை ஆழமாக பாதிக்கும் ஒரு அற்புதமான உணர்வை பெறவைக்கிறது படம், எல்லோரும் பல முறை பார்க்கவேண்டிய படம். மனம் பலவாறு பண்படும்.

தமிழ் சினிமா இப்படி எங்கோ பத்திரமாக இருக்கிறது என்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும். மிஷ்கின் ஒரு அற்புதமான கலை படைப்பை தந்திருக்கிறார், அவரைப்பற்றிய விமர்சனங்களை எல்லாம் இந்த ஒரு படத்திற்காக பொருத்துகொள்ளலாம் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது.

தவநெறிச்செல்வன்

2 comments:

  1. இந்தப்படத்தில் கதாநாயகி தன் கதையை விவரிக்கும் இடத்தில் உள்ள வசனம் மிக நேர்த்தியானதாக எனக்கு தோன்றியது “ புது சரக்குன்னு புது சரக்குன்னு மூனுநாள்ல என்ன முப்பத்தாறுபேறு மோந்து பார்த்தாங்க அதுக்கப்புறம் நான் எண்ணல” மிகுந்த வலியை ஏற்படுத்தியது. படம் முழுக்க நமது மனதை ஆழமாக பாதிக்கும் ஒரு அற்புதமான உணர்வை பெறவைக்கிறது படம், எல்லோரும் பல முறை பார்க்கவேண்டிய படம். மனம் பலவாறு பண்படும்.........
    உங்கள் கருத்து நன்றாக உள்ளது, ஆனால் எனக்கு சில சந்தேகங்கள், இந்த படத்தை பல முறை பார்க்கவேண்டிய படம் என்று சொல்றீங்க ஏன்? இதில் கதாநாயகிக்கு ஏன் இந்த நிலமை ஏற்பட்டது? இது அவளுடைய தவறு அல்லவா? கதாநாயகரை அவரின் அம்மா தான் மனநல காப்பகத்தில் சேர்கிறார், பிறகு அவரே மனநிலை பாதிக்கப்படுகிறார் ஏன்? பெண் புத்தி பின் புத்தி என்பார்களே அதற்கு இந்த படம் ஒரு உதாரணம், ஆனாலும் இந்த படத்தில் சில நல்ல கருத்துகள் உள்ளது.

    ReplyDelete
  2. ஒருமுறை பார்க்கும்போது மனது ஒரு உயிரின் வேதனை கண்டு துடிக்கிறது, இது தொடர்ந்தால் மனிதனின் மனம் இன்னொருவரை புண்படுத்த யோசிக்கும், கதையின் ஆதிமூலங்கள் அவசியமில்லை இது ஒரு சம்பவம். சமூகத்தில் உள்ள சம்பவங்களின் வேதனை பார்வையாளார்களை இனி அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது மனித தன்மையோடு நடக்க செய்யும்.அதுதான் கலையின் வெற்றி மனிதனை பண்படுத்தும். உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்