Dec 31, 2010
பரோட்டாவும் சில பயங்களும் (Fear)
நேற்று (31-12-2010) Asianet middleeast தொலைக்காட்சியில் நம்மள் தம்மிள் என்ற பொது விவாத மேடை நிகழ்ச்சி ஓலிபரப்பினார்கள், அதன் தலைப்பு இன்றைய உணவுப்பொருட்கள் பற்றியது, உணவுகளில் குவிந்து கிடக்கும் கலப்படங்களைப்பற்றிய ஒரு அற்புதமான ஒரு நிகழ்ச்சி பார்த்து முடித்தபோது தற்போது கடையில் விற்கும் எந்த உணவுப்பொருளையும் வாங்கி சாப்பிட முடியாதோ என்கிற பயம் வந்தது.
முக்கியமாக பரோட்டா, இது இன்று தமிழகத்திலும் கேரளத்திலும் மிக இன்றியமையாத ஒரு உணவுப்பொருளாகிவிட்டது. ஆனால் அதன் கெடுதல்கள் மிக அதிர்ச்சிகரமானதாக இருந்தது. ஒரு இயற்கை உணவாளர் பல நாகரீக உணவு பொருட்களை விவாத மேடையில் கொண்டு வந்து காட்டி இவைகளை தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
பரோட்டா பற்றி மிக அவசியம் சொல்லவேண்டும் என்பதாலே இந்த பதிவு.
பரோட்டா செய்ய பயன்படும் மைதா கோதுமையின் பல வித நல்ல விஷயங்களை எடுத்தபின் அதில் உள்ள சக்கைதான் மைதாவாக மாறுகிறது, இதனால் உடலுக்கு எந்த உபயோகமும் இல்லை. இதன் வெள்ளை நிறத்தை ஏற்படுத்த ஒரு வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது அந்த வேதிப்பொருள்தான் மிக மோசமான விஷயம்.
சாதாரணமாக நம் வியாதிகளுக்கு கண்டுபிடிக்கும் மருந்துகளை விலங்கினக்களுக்கு கொடுத்து சோதித்து பார்த்து பின்னர்தான் மனிதர்களுக்கு கொடுப்பார்கள், ஆனால் சர்க்கரை வியாதிக்கான மருந்தை அப்படி சோதிக்க முடியவில்லை, காரணம் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் வருவதில்லை. ஆகையால் விலங்குகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு ஒரு மருந்து கொடுத்து, பின்னர் சர்க்கரை நோய் வந்த பின் அதை தீர்க்க மருந்து கொடுத்து சோதிக்கிறார்கள்.அப்படி விலங்குகளுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு கொடுக்கப்படும் வேதிப்பொருள்தான், மைதாமாவை வெள்ளை நிறமாக மாற்ற பயன்படுகிறது, இப்போது யோசித்துப்பாருங்கள்,
மைதா வெள்ளைக்காரர்களால் பசை உபயோகத்திற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது இருந்த ஏழ்மை நம் மக்களை மைதா கஞ்சி அருந்த வைத்திருக்கலாம், பின்னர் அதுவே நமது சமையல் வல்லுனர்களால் பல உருவங்களை அடைந்து விட்டது,
பாரம்பரியமாக சர்க்கரை நோய் வரவாய்ப்பே இல்லாதவர்களுக்கு கூட இந்த பரோட்டா சர்க்கரை நோய் வரவைக்கும், நம்மில் எல்லா குடும்பத்தினரும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் உங்கள் குடும்பத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எத்தனைபேர் இல்லாதவர் எத்தனைபேர் என்று.கிட்டத்தட்ட 40 வயதைக்கடந்த எல்லோருக்கும் இருக்கும்.
அப்படியானால் நமக்கு எவ்வளவு முன்கருதல் வேண்டும், முடிந்தவரை மைதா இல்லாத உணவுப்பழக்கத்தை கடைபிடிப்போம். அந்த நிகழ்ச்சியின் ஓலி ஓளி வடிவை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அதனை இங்கே இணைக்கிறேன், பல நல்ல தகவல்கள் இருக்கின்றன.
தவநெறிச்செல்வன்
Subscribe to:
Post Comments (Atom)
ஏம்பா பரோட்டா விரும்பிகளா! ஒரு நிமிஷம் நின்னு இந்த பதிவ படிச்சிட்டு மேல ரெண்டு பரோட்டா சேர்த்து சாப்புடுங்க வாழ்க்கையின் இனிமையை காசு கொடுத்து தொலைக்க இத விட எளிதான வலி எனக்கு தெரியல
ReplyDeleteகருத்துக்கு நன்றி பொற்கோ அவர்களே.
ReplyDeleteநல்ல தகவல். அரபு நாடுகளில் வாழும் நிறைய பேர்கள் மைதா மாவின் மூலம் உண்டாகும் பரோட்டா ,ரொட்டி மற்றும் பிஸா போன்றவற்றையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அதனை தவிர்க்க அல்லது குறைக்க முயற்சிக்க வேண்டும்.பேக்கரி தயாரிப்புகளை உண்ணுவதும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ReplyDeleteமிகவும் சரியான தகவல். அது போல அஜினாமோட்டோ போன்ற டேஸ்ட் மேக்கர்களும் மிகவும் ஆபத்தானவை. வாழ்த்துக்கள்.
ReplyDelete