May 27, 2009

மே-2009 தேர்தல் முடிவுகள் ஒரு புரட்சி

2009 தேர்தலும் எனது அனுமானமும்

என்ற கட்டுரை மூலம் எனது கணிப்புகளை எழுதியிருந்தேன், அதில் குறிப்பிட்டிருந்தபடி கிட்டதட்ட எல்லா கட்சிகளும் அதே அளவில் வெற்றி பெற்றிருப்பதை காண்கிறேன், தமிழகத்தில் மட்டும் எனது கணிப்புகள் மிகவும் மாறுதலான பதிலை பெற்றுவிட்டன அதற்காண காரணங்கள் இன்னும் குழப்பமாகத்தான் உள்ளது, பா.ஜ.காவுக்கு நான் குறிப்பிட்டிருந்த 116 சீட்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 254 அதில் 258 ஆகவும் மற்ற எல்லா கட்சிகளிலும் சொற்ப வேறுபாட்டோடு கூடியதாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்து இருக்கிறது. ஒருவகையில் தமிழகத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் எனது கணிப்புகள் சரியாகவே இருந்திருக்கிறது வாசகர்கள் எனது பழய
http://dhavaneri.blogspot.com/2009/03/blog-post_4892.html இந்த பதிவை கண்டால் விபரம் அறியலாம். நிறைய விஷயங்கள், எழுத வேண்டியுள்ளது, பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து விட்ட மாதமாக இந்த மே-2009 அமைந்து விட்டது

1. இந்திய பொது தேர்தல் முடிவுகள் ஒரு புரட்சியாக வந்தது.
2. பாட்டாளி மக்கள் கட்சி ஒரு பலமான கூட்டணியில் இருந்தும் தோற்றுப்போனது
3. இலங்கை போர் அழிவுகள்
4. பிரபாகரன் உள்ளிட்டோர் மரணம்
5. புதிய ஆட்சியில் கருணாநிதியின் அமைச்சர்கள்
6. பாகிஸ்தானில் தாலிபன்களுடன் அந்த நாட்டு ராணுவமும், அவர்களை
வளர்த்துவிட்ட உளவுப்பிரிவும் மோதவேண்டிய சூழல்
7. கம்னியூஸ்ட் கட்சிகள் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் பெற்ற தோல்வி
8. காங்கிரஸ் உ.பி யில் பெற்ற பிரமாண்ட வெற்றி,
9. பிரதமர் கனவு கண்டுகொண்டிருந்த பலரின் எண்ணங்களில் விழுந்த மண்.
10. சிரஞ்சீவியின் தோல்வி.

இன்னும் எத்தனையோ விஷயங்களை நாம் இந்த மாதத்தில் கண்டு இருக்கிறோம் அவைகளைப் பற்றி நிறைய எனது எண்ணங்களை இதில் தொடர்ந்து எழுதுவேன்.
அகில இந்திய அளவில் மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் தலமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெற்றுள்ளது அதன் விளைவு மீண்டும் காங்கிரஸின் மன்மோகன் சிங் பிரதமராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்பது நிதர்சனம்,

இதில் காங்கிரஸை எதிர்த்தவர்கள் எல்லாம் மிக மோசமாக அடிப்பட்டிருக்கிறார்கள், காங்கிரஸீடன் கடைசிவரை ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து விட்டு அதன் பின் தேர்தலின் போது எதிர்த்தவர்கள் எல்லாம் அப்படி ஒரு அடிவாங்கியிருக்கிறார்கள். அவர்கள் ராமதாஸ், லாலூ பஸ்வான், போன்றவர்கள் முக்கியமானவர்கள், அதில் முலாயம்சிங் யாதவும் கூட சேர்கிறார். மாயாவதி ஒரு பிரமாண்டமான வெற்றியை பெற்று அதன் மூலம் ஒரு பிரதமர் வேட்பாளர் என்கிற ஒரு நிலையை அடைவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இது மிகவும் தெளிவான முடிவாக அமைந்து விட்டது,

நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒரு வழக்கு சொல் எல்லா தேர்தலிலும் சொல்வார்கள், “அதாவது மக்களவைத்தேர்தல் என்றால் மக்கள் மிகவும் தெளிவாக காங்கிரஸூக்குதான் வாக்களிப்பார்கள் அது மற்ற உள்ளூர் விஷயங்கள் பெரிய பாதிப்புகளை ஏற்ப்படுத்தாது என்பதுதான்” அது அப்போதைய இந்திரா காலத்திய ஒரு வழக்கமான சொல், அதுதான் இப்போது நடந்திருக்கிறது, எனக்கென்னவோ காங்கிரஸ் தனியாக நின்றிருந்தால் வடக்கில் இப்போது பெற்றிருக்கும் வெற்றிகள் அப்படியே கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது,

எந்த குழப்பமும் இல்லாமல் ஒரு தெளிவான முடிவை தந்திருக்கிறார்கள், அதன் ஆழமான காரணம் ஒரு நிலையான ஆட்சி, மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட மன்மோகன் சிங் மீதான மக்களின் நம்பிக்கை, இதில் உத்திரபிரதேசத்தை பொருத்தவரை ராகுல் காந்தியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, கிட்டதட்ட காங்கிரஸ் இல்லை என்கிற நிலையில் ஆகியிருந்த உ.பி இன்று காங்கிரஸ் அங்குள்ள மற்ற முன்னனி கட்சிகளுக்கு இணையாக 22 இடங்களில் வென்று சம பலத்தில் நிற்கிறது, முலாயம் கூட்டு சேர்ந்திருந்தால் மாயாவதி ஒன்றும் இல்லாமல் போயிருப்பார் என்கிறார்கள் சிலர், ஆனால் காங்கிரஸ் தனியாக நின்றதால்தான் அதன் வெற்றி ஒரு நம்பிக்கையான காரணமாக ஆகிவிட்டது என்பதுதான் முக்கியமான விஷயம்.

ஒரு வகையில் இந்த தேர்தல் ஒரு நல்ல முடிவை தந்துள்ளது, நல்லவேளையாக ஒரு குழப்பமில்லாத அரசு அமைய இந்த முடிவுகள் காரணமாக அமைந்து விட்டது,

இலங்கைப்பிரச்சினை,

இந்த தேர்தல் இலங்கைப்பிரச்சினை எதிர்பார்த்த அளவுக்கு பெரிய சிரமத்தை ஏற்ப்படுத்தாமல் போனது ஒரு பெரிய திருப்பம்தான், ஆனால் அது அந்த தமிழ் மக்களுக்கு மிகவும் பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டிருக்கலாம். பிரபாகரனின் இறந்து விட்டதாக இன்னும் குழப்பத்தில் இருந்தாலும் தொடர்ந்து வருகின்ற செய்திகள் அதை நம்பக்கூடியதாக இருக்கிறது, இந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது,

இனியாவது இந்தியா தனது முயற்சியை அதிகப்படுத்தி அதன் மூலம் இலங்கைத்தமிழர்களுக்கு ஒரு நல்ல சம நிலை வாழ்க்கை ஏற்ப்பட உதவவேண்டும், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ராஜீவால் ஏற்படுத்தப்பட்டதையாவது செயலாக்கம் செய்ய இந்தியா உதவவேண்டும், அதன்மூலம் இன்னும் ஒரு போராளி இயக்கம் ஏற்படாமல் அவர்கள் அமைதியாக வாழ வேண்டிய சூழலை உருவாக்க முனைய வேண்டும்,

இத்தனை பிரச்சினைக்கு பிறகும் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கும் கருணாநிதியும் இந்த நிலையில் ஒரு தொடர் முயற்சியை மேற்க்கொண்டு இலங்கைத்தமிழர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவு செய்து தரவேண்டும்.

தவநெறிச்செல்வன்

1 comment:

  1. நண்பரே இலங்கையின் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஆபத்து வருகின்ற காலங்களில் மட்டுமே நம்மை உறவு
    என்கின்றனர். வெள்ளை ஆட்சியின் கீழ் உலகம் முழுவதும் இருந்த போது இந்தியாவில் இருந்து அதவது நமது தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக இலங்கை ஜாவா சுமத்ரா பிஜி போன்ற தீவு
    களில் கொண்டு குறிப்பாக நமது பிற்படுததப்பட்ட இன மக்களை தாழ்த்தப்பட்ட இனத்தவர்களை அமர்த்தியது.அவர்கள்தானிலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் கடுமையாக் உழைத்து இலங்கையைச் செல்வ வளம் கொழக்கச் செய்தனர்.அவர்களுக்கு இலங்கை சிங்கள அரசு தந்திருந்த வாக்குரிமையை ரத்துச் செய்கின்ற தீர்மானத்தை இலங்கை நாடாளுமன்றத்திலே கொண்டு வந்து
    அவர்களின் வாக்குரிமையைப் பறித்தது யாழ்ப்பாணத்துத் தமிழினத்தலைவர் குமார பொன்னம்பலம். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் கொழும்பில் வணிகம் செய்வதற்காகச் சென்று வணிகம் செய்து வெற்றி கண்ட நமது தமிழர்களைச் செல்லமாக வேசி மகன் என்றும் கள்ளத்தோணி என்றும் வடக்கத்தியான் என்றும் தான் ஏசுவார்கள்.நம்மை விட அவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் அவர்களை விட நாம் எல்லா விதத்திலும் தாழ்வு என்றும் கதைப்பார்கள்.அருட்பெருஞ்ஜோதி வள்ளற்பெருமானின் அருட்பாவை மருட்பா என்று இங்கே வந்து வழக்குத் தொடுத்தவர் யாழ்ப்பாணதது ஆறுமுக நாவலர்.
    தொப்புள்கொடி என்ற பபச்ச்செல்லம் இப்போதுதான்.
    மொத்த இலங்கையின் எல்லா உயர் பதவிகளிலும் படைத்தலைமைப் பொறுப்பினிலும் அவர்கள்தான் இருந்து கொண்டு பெரும்பான்மை சிங்கள இன்த்தை ஆட்டிப் படைத்துக் கொண்டார்கள். நமது நாட்டில் முற்படுத்தப் பட்ட இனத்தவர்கள் இருந்து கொண்டு பெரும்பான்மையான நம்மை ஆண்டு கொண்டிருந்தது போல். இங்கே அண்ணாவும் அவரது தம்பியரும் இந்தக் கொடுமையை ஒழித்தது போல் . அங்கே பண்டாரநாயகா சிறு பான்மை இனமான யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் பெரும்பான்மை இனமான தங்களை ஆள்வதனைத் தடுக்க இங்கே நாம் முற்படுத்தப்பட்ட இனத்திற்கு எப்படி இட ஒதுக்கீடு அடிப்படையில் 98 மதிப்பெண் எடுத்தால்தான் கல்லூரிகளில் இடம் என்றோமோ அதையே அவர்களும் கொண்டு வந்தார்கள். இங்கே சரி என்றால் அது அங்கேயும் சரிதானே.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்