Mar 28, 2009

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் எனது கணிப்பு.

ஓரளவுக்கு கூட்டணி குழப்பங்கள் தீர்ந்துவிட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஒருவாறு கற்பனை செய்ய முடிகிறது. இது பழய எனது தேர்தல் அனுமானங்களில் இருந்துதான் சொல்கிறேன்,

என்ன இருந்தாலும் இந்த தேர்தல் பெரிய அலைகள் ஏதும் இல்லாத நிலையில் வெறும் கூட்டணி பலம் மட்டுமே நிர்ணயிக்க கூடிய விஷயமாக இருப்பதால் இந்த கணிப்பு சாத்தியப்படுகிறது, தொகுதி வாரியான ஓட்டுக்களை பற்றிய போன தேர்தல் விபரங்களை சேகரித்து கொண்டிருக்கிறேன் ஆகையால் அவைகளைப்பற்றிய நீண்ட தொடர் பதிவை எழுத நினைத்துள்ளேன், எனது பணிகளுக்கிடையில் எழுதுதல் சிரமமாக இருப்பதால் ஒருவேளை தேர்தலுக்கு முன் இயலுமா என்று தெரியவில்லை.

இருந்தாலும் புதுவை சேர்த்த 40 தொகுதிகளில் இந்த 2009 மக்களவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு கீழ்கண்டவாறுதான் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

அதிமுக அணி 30 இடங்கள்
திமுக அணி 10 இடங்கள்.

இதில் தேமுதிகவின் நிலையில் கடைசிநேரத்தில் திமுகவுக்கு சாதகமான மாற்றம் ஏற்பட்டால் 3ல் இருந்து 5 இடங்கள் திமுக அணிக்கு கூடுதலாக கிடைக்கலாம்.

போன தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அணியில் ஏற்ப்பட்ட மாற்றம் காரணமாக இந்த முடிவுகளில் இத்தனை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன், ஓரிரண்டு இடங்கள் வேட்பாளரின் தனிப்பட்ட நல்ல பெயரை பொருத்து கூடுதலாகவோ குறைவாகவோ போகலாம்.

காங்கிரஸைப் பொருத்தவரை தமிழகம் அத்தனை கூடுதல் சீட்களை பெற்று ஆட்சி அமைப்பதில் பெரிய பங்காற்ற முடியாமல் போவது ஒரு பின்னடைவுதான், ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் இந்த கூட்டணிகள் மாறி அடிக்கப்போகும் கூத்துக்கள் மிக மோசமானதாக இருக்கும், அது இந்திய ஜனநாயக அமைப்பையே கேலிக்கூத்தாக மாற்றும் அளவுக்கு இருக்கும் என்கிற பயம் எனக்கு உள்ளது.

எது எப்படியோ தேர்தல் திருவிழாவை ஜாக்கிரதையாக கொண்டாடுவோம்.

தவநெறிச்செல்வன்

1 comment:

  1. தேர்தல் முடிவுக்கு பின் இந்த கூட்டணிகள் மாறி அடிக்கப்போகும் கூத்துக்கள் மிக மோசமானதாக இருக்கும், அது இந்திய ஜனநாயக அமைப்பையே கேலிக்கூத்தாக மாற்றும் அளவுக்கு இருக்கும் என்பது முற்றிலும் உண்மை, இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி இருக்கிறது, புரிந்து போய்விடும்,
    அன்புடன் ஜீவா

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்