Mar 26, 2009

தேர்தலும் மன உளைச்சலும்.

இதென்ன அப்படி ஒரு மன உளைச்சல் என்று உங்களுக்கு தோன்றலாம், நம்ம நாட்டில் தேர்தல் வந்தாலே வீட்டில் ஒரு விஷேசம் போல பலருக்கு தோன்றலாம், அதற்கு காரணம் தேர்தல் திருவிழா போல கொடி தோரணம் ஒலி பெருக்கி ஊர்வலம் என்று சுகமான விஷ்யங்கள் நிறைய கலந்த கலவை என்பது தான்.

எனக்கு இந்த அரசியல் மிக பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு போல, முன்பெல்லாம் அரசியல் இத்தனை பணம் புழக்கம் அல்லது கொள்கை இல்லாத ஒரு விவஸ்த்தை கெட்ட விழாவாக இல்லாது இருந்திருக்கும், ஆனால் இன்று உள்ள தலைவர்கள் அடிக்கும் கூத்துக்கள் பல மாதிரியான நகைச்சுவையை மக்களிடம் உண்டாக்குவதும் பல மாதிரியான வருமானத்தை மக்களிடம் உண்டாக்குவதும் மக்களை மிகவும் தேவையான ஒரு சுவாரஸ்யத்துக்க்குள் கொண்டு போகிறது.

அது போகட்டும் இந்த மாதிரியான மன உளைச்சல் இப்போது எல்லா அரசியல் வாதிகளுக்கும் உண்டாகி இருக்கும் அவரவர் கவலை விதம் விதமாக இருக்கிறது.
தலைவர்களுக்கு கூட்டணிக்கு கட்சிகளை இழுப்பதில் படு பயங்கர மன உளைச்சல் உருவாகி இருக்கும், ஒரு வழியாக மருத்துவர் தனது முடிவை அறிவித்து விட்டதில் அதிமுக வுடனான பேரங்கள் முடிவாகி நல்ல ஸ்கோர் கிடைத்திருக்கும் எனத்தோன்றுகிறது, இது முடிவாகும் வரை திமுகவில் அத்தனை சுகமான சூழல் நிலவி இருக்காது என்பது நிச்சயம், இன்றைய நிலையில் திமுக கூட்டணி மிகவும் பலவீனமான ஒரு நிலையில் இருப்பது உண்மை,

திமுக கூட்டணியில் போதுமான கட்சிகள் இல்லை, காங்கிரஸ் மட்டுமே இப்போதைக்கு பலமான ஒரு கட்சியாக இருக்கிறது, மற்ற விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் மிகவும் சொற்ப வாக்கு வங்கிகள் கொண்ட அமைப்பாக இருக்கிறார்கள், ஆனால் காங்கிரஸுக்கும் தேமுதிக வுக்கும் ஏற்பட்டுள்ள தனி உடன்பாட்டால் காங்கிரஸ் தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள் என்று சில செய்திகள் வருகின்றன அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அத்தனை பாதிக்கப்படாது என்று தோன்றுகிறது, ஆனால் திருமாவளவனின் முந்தைய காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரம் இப்போதைக்கு அவர்களின் இணைச்செயல்பாட்டுக்கு மிகவும் இடைஞ்சலாக அமையலாம், அதனால் பரஸ்பரம் அவர்களின் தொகுதிகளில் குழிபறிக்கும் வேலைகள் நடக்கும், இதெல்லாம் மிகவும் பலமான கூட்டணியான அதிமுகவுக்கு சாதகமான அம்சங்கள். கூடவே திமுக தலைவரின் அறிக்கைகள், மற்றும் மின் தட்டுபாடு, இலங்கை பிரச்சினை போன்ற வற்றில் காங்கிரஸையும் திமுகவையும் வசைப்பாடும் வசதியான இடத்தில் மருத்துவரும் வைகோவும் இருப்பதும் அதன் காரணம் கொண்டு அவர்கள் மிக எளிதாக முத்துகுமாரின் மரணம் போன்றவற்றை உபயோகப்படுத்தி இந்த தேர்தல் பிரச்சாரத்தை மிக அனல் கக்க கூடியதாக மாற்ற முடியும்.

ஆனால் மருத்துவரின் காங்கிரஸ் எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறி, ஆனாலும் திமுக எதிர்ப்பு மிக கடுமையானதாக இருக்கும் என்பது நிச்சயம். கலைஞரின் உடல் நிலை இந்த தேர்தலில் அவரை சரிவர பிரயாணம் செய்ய முடியாமல் தடைசெய்யும், அவருக்கு அடுத்துள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் முக்கியமாக ஆர்க்காட்டார் பிரச்சாரத்துக்கு போகாமல் இருப்பது நல்லது. மற்ற அடுத்த தலைவர்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை, ஸ்டாலின் அழகிரி, கனிமொழி ஆகியோர் இந்த தேர்தலில் மிகுந்த முக்கிய பங்கு வகிக்க கூடும்.

சன் டிவியும் கலைஞர் டிவியும் மிகுந்த உதவியான விஷ்யமாக இருக்கும், மேலும் பல விஷயங்களை அலசி ஆராய்ந்து பேசக்கூடிய தலைவராக கலைஞர் மட்டுமே இருப்பது ஒரு திமுகவுக்கு ஒரு பலவீனம்தான். காங்கிரஸின் தேர்தல் அணுகுமுறை எப்போதும்போல் ஒரு மாதிரி வேகம் குறைவானதுதான், ஆனால் சோனியா மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா என்று அவர்களின் பிரபலங்கள் இருப்பதால் அவர்கள் பாடு கொஞ்சம் தேவலாம்,

இப்போதைய மாநில அரசு செயல்பாடுகளின் பின்னடைவுகளை பூசிமெழுக கலைஞராலே முடியவில்லை எனும்போது மற்றவர்கள் எப்படி அதை எதிர்கொள்ளபோகிறார்கள் என்பது ஒரு மிகப்பெரிய விஷ்யம்.

அதிமுக கூட்டணியின் நிலை இதற்கு நேர்மாறாக உள்ளது, மீடியா பவர் தவிர மற்ற எல்லா சக்திகளும் அங்கே அதிகம், திமுக அரசை குறைகூற எக்கசக்கமான காரணங்களை கலைஞர் உருவாக்கி கொடுத்திருக்கிறார், மேலும் தனது தினசரி அறிக்கைகள் மூலம் இன்னும் புதிய வாய்ப்புகளை அவர்க அதிமுக அணிக்கு உருவாக்குவார் என்பது என் நிச்சயமான எண்ணம்.

வைகோ,ராமதாசு,ஜெயலலிதா,தா.பாண்டியன், வரதராஜன், போன்ற முதல் கட்ட தலைவர்கள் இருப்பதால் அதன் பிரச்சார வியூகம் மிகவும் வலுவாய் இருக்கும்,
அதிமுக தொண்டர்களை பொருத்தவரை அவர்களை உற்சாகப்படுத்த ஜெயலலிதா மட்டுமே போதுமானது, அவர் பிரச்சார பயணத்துக்கு தயாராக இருக்கிறார் என்பது அதன் முக்கிய பலம், திமுகவை குறைகூற அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய சாதகாமான நிறைய காரணங்களை கொண்ட மற்ற தலைவர்கள் அதிகம் இருப்பது ஒரு முக்கியகாரணம், வைகோவும் ராமதாசுவும் அதனை மிக நேர்த்தியோடு செய்வார்கள் என்பது எனது நம்பிக்கை,

மீடியா விஷயத்தில் அதிமுக அணி மிக பலம் குறைந்த அணியாக இருப்பது ஒரு பலவீனம்தான், அதை சன் டிவியும் கலைஞர் டிவியும் மக்களை எந்த அளவுக்கு எரிச்சல் பட வைக்கப்போகிறார்கள் என்பதை பொருத்து இந்த பலவீனம் பலமாக மாறும் சாத்தியதை உள்ளதாக நான் கருதுகிறேன்,

இனி வேட்பாளர்கள் அறிவிப்புகள் வந்ததும் பல புதிய விஷயங்கள் வரலாம், வேட்பாளர்களை பொருத்து சில மாற்றங்கள் வெற்றி வாய்ப்புகளில் ஏற்படுத்த கூடும்
அதன் பின் நாம் மீண்டும் சந்திப்போம்.

இந்த தேர்தல் ஒரு புதிய கணக்கை அரசியல்வாதிகளுக்கு மீண்டும் கற்றுகொடுக்கும் என்பது நிச்சயம்

தவநெறிச்செல்வன்

5 comments:

  1. இந்த தேர்தல் ஒரு புதிய கணக்கை அரசியல்வாதிகளுக்கு மீண்டும் கற்றுகொடுக்கும் என்பது நிச்சயம்.
    நீங்கள் சொன்னது முற்றிலும் சரி,பொருத்து இருந்து பார்ப்போம்.
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  2. ramdoss oru pachonthi

    ReplyDelete
  3. இந்த தேர்தலில் எந்த ஒரு பெரிய மாற்றமும் எதிர்பார்க்க முடியாது .உதவும் நிலையில் இருக்கும் வரைதான் உதவிகேட்டு வருவார்கள் அந்நிலையை விட்டு மாறும்போது நாம் போராடவேண்டிவரும் என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்

    ReplyDelete
  4. எல்லா முடிவும் தேர்தல் நேர எஜமானிகளின் (ஏழைகள்) கையில் மட்டுமே,
    அடுக்கு மாடி எசமாணிகள் வீட்டில் இருந்து பேசுவதோடு சரி, யாரும் வாக்கு சாவடி பக்கம் வருவது இல்லை

    முருகா

    ReplyDelete
  5. கருத்து கூறிய எல்லோருக்கும் நன்றி.

    தேர்தலில் கட்சிகள் அடிக்கும் கூத்துக்கள் வழக்கமானவையே, ஆனால் நமது கடமை ஓட்டு போடுவது அதை எல்லா வாக்காளர்களும் எந்த சலுகைக்கும் அடிபணியாமல் சரியாக செய்வதில்லை,
    வாக்காளன் கடமையை சரியாக செய்யாமல் விடுவதும் ஒரு முக்கியமான காரணம், நான் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லி பழகிவிட்டோம்

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்