சென்னை புத்தகக் காட்சி 2011 நாளை செவ்வாய்க்கிழமை [04.01.2011] மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. எப்போதும் நடக்கும் அதே சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே.
17.01.2011 வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வேலை நாள்களில் மதியம் 2.00 மணிக்குத் தொடங்கும். இரவு 8.30 வரை கண்காட்சி நடைபெறும். விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முடிந்தவர்கள் சென்று புத்தகங்களை வாங்கி வரவும், எந்த புத்தகம் வாங்கினாலும் நல்லதுதான், படிக்கிற பழக்கம் வளரவேண்டும். புதிதாக படிக்க தொடங்குபவர்கள், வரலாறு சார்ந்த நாவல்களை தொடங்கினால் சுவாரஸ்யமாக இருக்கும், சமூக நாவல்களும் வாங்கலாம்.
ஒருமுறை கண்காட்சி திடலுக்கு சென்றாலே நிறைய தோன்றலாம்.
தவநெறிச்செல்வன்
சென்ற வாரம் சென்னை புத்தக கண்காட்சியில் “சீனா விலகும் திரை” எனும் புத்தகம் வாங்கினேன். பல்லவி அய்யர் எழுதியது. நாளை முழுமையாக அரங்கை சுற்றிப்பார்த்து மேலும் பல புத்தகங்களை வாங்கவுள்ளேன்..!!
ReplyDelete