
புக்குஷிமா தய் இச்சி அணுமின் நிலையம்
(படங்கள் விக்கீபிடியாவிலிருந்து)

மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் ஜப்பான் புக்குஷிமா நகரில் உள்ள தய் இச்சி அணுமின் நிலையத்தில் உள்ள BWR அதாவது Boiling water Reactor. இது ஒரு கனமான காங்ரீட் கட்டிடம், இதன் அளவு என்ன என்பதற்கு ஒரு சிறிய ஓப்புமை. அதாவது எண் 5 குறிக்கப்பட்டுள்ள இடம் மட்டும் 40 அடி நீளம் 40 அடி அகலம் உள்ளது சுமார் 35 அடி உயரம் உள்ளது. அப்படியானால் மொத்த அணு உலையின் நீள அகலம் எவ்வளவு பிரமாண்டமாய் இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கே விடுகிறேன்.

இதில் எண் 21, 10, 20, 2, இவையெல்லாம் கடுமையான காங்ரீட் சுவர்கள் இவைகளின் கனம் சுமார் 1 மீட்டர் வரை இருக்கும்(சரியான அளவு தெரியவில்லை). எண் 11 ஆரஞ்சு நிறத்தில் உள்ள இருப்புத்தகடு அதுவும் மிகுந்த கனம் உள்ளது. இந்த கனமான அமைப்புகள் அதிலிருந்து வரும் அணு அலைகளை கட்டுப்படுத்தவே உதவுகின்றன. இதில் வெடி விபத்து ஏற்பட்டது எண் 22, 26 அமைந்துள்ள மேற்கூரை பகுதியில்தான், எண் 22, 26 அணு உலைகளில் யுரேனியம் அல்லது அதுபோன்ற அணு உருளைகளை கையாளும் கிரேன் உள்ள பகுதி. மேற்பகுதியில் ஏற்பட்ட வெப்பநில்நிலை அதிகரிப்பால் அந்த வெடிப்பு நிகழ்ந்தது.
இங்கே ஒரு விஷயத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஜப்பானியர்கள் தொழில் பாதுகாப்பு முறைகளில் மிக கவனம் உள்ளவர்கள் கூடவே மனிதர்களின் ஆரோக்கியத்திலும் மிக கவனம் உள்ளவர்கள், ஆகையால் தங்களின் பாதுகாப்பு அரண்களை எந்த அளவுக்கு செய்திருப்பார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
பிரச்சினை எங்கே.
மேலே உள்ளப்படத்தில் மூன்று இடங்களில் அணுக்கதிர் உருளைகள் பாதுகாக்கப்படுகின்றன. எண் 3ல் புதிய அணு உருளைகள், எண் 1ல் செயல்பாட்டில் உள்ள உருளைகள் அவைகள்தான் வெப்ப உற்பத்தியில் இருக்கின்றன. எண் 27ல் பயன்படுத்தப்பட்டு சொற்ப அணு கதிர்வீச்சு உள்ள உருளைகள் (spent fuel rod).
சரி இந்த அணு உலைகள் எப்படி செயல்படுகின்றன என்று பார்ப்போம். இந்த அணு கதிர் உருவாக்கும் உருளைகளை உலைகளுக்குள் வைத்து சிறிய அணுவைக்கொண்டு அதில் அணு கதிர் வீச்சை உருவாக்குகிறார்கள், அதன் பெயர் ஆங்கிலத்தில் chain reaction அதாவது அதில் இருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் அடுத்த அணுக்களைத்தாக்கும்பொது அது மேன்மேலும் அது சங்கிலித்தொடர்போல போய்க்கொண்டே இருக்கும் அந்த கலத்தின் உள்ளே அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோழிய இந்த தொடர்ச்சி நிற்காது. இந்த சூழலில் மிக அதிகமான வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தை தண்ணீரை சூடாக்க உபயோகப்படுத்தி நீராவியாக்கி அந்த நீராவி மூலம் மின் உற்பத்தி செய்கிறார்கள்.
இந்த அணு உருளைகளின் அணுக்களை கட்டுப்படுத்த எண் 39 கட்டுப்படுத்தும் உருளைகள் என்கிற control rod உள் செலுத்தப்பட்டுகின்றன, இதனால் அணு உலையின் செயல் நிறுத்தப்படும். காரணம் இந்த control rod என்பது உலைக்குள் இருக்கும் அணுக்களை தனக்குள் கவர்ந்துகொள்ளும் பண்பு வாய்ந்தது, அதனால் chain reaction நடைபெறுவது தவிர்க்கப்படுகிறது. பூகம்பம் வந்த அன்று இந்த கட்டுப்படுத்தும் உருளைகள் தானியங்கி கருவி மூலம் சரியாக செயல்பட்டு அணு உலை செயல்பாட்டை கட்டுப்படுத்திவிட்டன. ஆனாலும் வெப்பம் அதிகரிக்க காரணம்.
1.பக்கத்தில் எண் 5 ல் உள்ள எண் 27ல் பாதுகாக்கப்பட்ட உபயோகப்படுத்தப்பட்ட உருளைகள் இருந்த தொட்டியின் தண்ணீர் அளவு குறைந்து அது தீ பிடித்தது.
2.மொத்த அணுமின் நிலையமும் மின் வெட்டு ஏற்பட்டு பிரதான அணு உலையின் குளிர்விக்கும் சாதனம், பம்புகள் செயல்பட முடியாமல் போனது.
சாதாரணமாக மின் வெட்டு ஏற்பட்டால் டீசல் ஜெனரேட்டர் செயல்பட்டு குளிர்விக்கும் பம்புகளை செயல்படுத்தும், அதுவும் தீர்ந்து போனால். பாட்டரிகள் செயல்ப்பட்டு 8 மணி நேரத்திற்கு பம்புகளை செயல்படுத்தும்.

ஜப்பானில் பழய அனுபவங்களின்படி மின் வெட்டு பூகம்பங்களினால் ஏற்படும்போது அதனை சரி செய்ய சில மணிநேரங்களே ஆகும் அதனை கணக்கில் கொண்டுதான் இந்த கால அளவுக்குள் எல்லா அவசர அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் இந்த முறை வந்த பூகம்பம் அதனைத்தொடர்ந்த சுனாமியும் ஜப்பான் கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் வந்ததுதான். ஜப்பானின் கட்டிடங்கள் மற்றும் பல அமைப்புகள் சுமார் 7 ரிக்டர் அளவு பூகம்பத்திற்கு தாங்க கூடியதாக கட்டமைக்க பட்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை வந்த பூகம்பம் 9 ரிக்டர் அளவில் வந்ததும், கூடவே சுனாமியும்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்.
இப்போது கடல்நீரைக்கொண்டு தற்காலிகமாக தீயணைப்பு எந்திரங்களாலும் ராணுவ ஹெலிக்காப்டர்களாலும் தண்ணீர் கொட்டி குளிர்விக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நேற்றைய நிலவரப்படி மின் நிலையம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வரும் நாட்களில் குளிர்விக்கும் பம்புகள் இயங்கத்தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அதன் பின் ஒரு பாதுகாப்பான நிலைவரும். அதுவரை எதுவும் சொல்வதற்கில்லை.
அதற்குள் ஏற்பட்ட அணுக்கசிவால் உணவுப்பொருட்கள், மற்றும் தண்ணீர் போன்றவற்றில் அணு கதிர்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். மிகவும் ஒரு பாதுகாப்பற்ற நிலைதான் இவ்வளவும்.