Jan 25, 2011

ஆடுகளம்



எனக்கென்னவோ இது ஒரு தனுஷ் படம் என்று சொல்லமுடியவில்லை, எந்த கதாபாத்திரமும் தனது சொந்த அடையாளத்தை காட்டாத ஒரு படம். எதார்த்தம் மீறாத ஒரு கதை அமைப்பு, முடிவிலும் ஒரு மாற்றமான சுபம் போட்டு முடிக்காத முடிவு, ஆனால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் முடிவு

எனக்கென்னவோ இது ஒரு புதிய தமிழ் சினிமாவின் அடையாளம் என்றுதான் நினைக்கிறேன், சேவல் சண்டையைப்பற்றி இயக்குனர் அதிகம் களப்பணி செய்து உருவாக்கி இருக்கும் படம். நல்ல உழைப்பை கொடுத்து கொண்டுவந்திருக்கும் இந்த படம் அவசியம் வெற்றி பெறவேண்டும். சிலகுறைகள் கூறப்படுகின்றன. அவைகள் பெரிய விஷயமாக எனக்குப்படவில்லை. ஒரு பிரபலமான ஹீரொவை வைத்துக்கொண்டு அவரின் சுய மேனரிசங்கள் வெளிப்படாமல் படம் எடுப்பது என்பது பெரிய விஷயம்.

தனுஷ் தனது சுய அடையாளங்களை பற்றி கவலைப்படாமல் ஒரு தேர்ந்த கலைஞனாக வாழ்ந்திருக்கிறார், அவர் ஒரு படி மேலே போய்விட்டார் என்றுதான் நினைக்கிறேன். மற்ற கலைஞர்களும் கூட யாருமே சுய அடையாளங்கள் மேலே வராமல் அந்த அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அவசியம் பார்க்க வேண்டிய படம்.

எனக்கு விமர்சனம் எழுத தெரியாததால் அதன் தொடர்பை கொடுத்திருக்கிறேன் கீழே.

விமர்சனம் இங்கே



தவநெறிச்செல்வன்.

Jan 20, 2011

அப்படிப்போடுங்க

புத்தக திருவிழா முடிந்துவிட்டது. நல்ல விற்பனை என்றில்லாவிட்டாலும் போன வருடத்தை விட நல்ல முன்னேற்றம் என்றுதான் பலர் சொல்கிறார்கள் அது ஒரு உற்சாகமான விஷயம்தான். வாங்கிய புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் முழுதும் படிக்கவேண்டும்.

இது என்னப்பா தமிழ் வாத்தியார் மாதிரி ஒரு தமிழ் நடை என்று சிலர் கேட்கிறார்கள், அடிக்காதீங்கப்பா வலிக்கும், என்பதற்கும் அடிக்காதீர்கள் அது வலியைக்கொடுக்கும் என்கிற வித்தியாசம் நிஜமா ஒரு மாதிரி போரடிகும்ன்னு சொல்றாங்க, நானும் சும்மா பேச்சு ஸ்டைலில் எழுதலாம்னு பார்த்தா அங்கங்க நம்ம தமிழ் வாத்தியார் உள்ள வந்து குந்திகிறார் என்ன செய்ய. சரி மேற்கொண்டு பார்க்கலாம்.

துக்ளக் சோ ஆண்டுவிழாவில பேசுனது ஒரே ஹைலைட் ஆக இருக்கு, அதான் விஜயகாந்தும் அம்மாவும் கூட்டணி போடனும்னு சொன்னதுதான். பின்ன கருணாநிதி ஸ்பெக்ட்ரம் மேட்டரை கண்டுக்க மாட்டாரு. ஏன்னா காங்கிரஸ்காரங்களுக்கும் அது பிரச்சினைன்றதால அவங்க பாத்துப்பாங்க அப்படின்னும் சொல்றாரு.
துக்ளக் விழா முழுதும் இந்த இணைப்பில் உள்ளது.

துக்ளக் விழா முழுதும்


இதுல என்ன விஷேசம்னா விஜயகாந்த் அம்மாவோட கூட்டணிக்கு போனது உறுதியா கலைஞருக்கு தெரிஞ்சி போச்சின்னு வைங்க, அப்ப அவரு தெளிவாயிடுவாரு, ஏன்னா இந்த மருத்துவர் அய்யா எந்த பக்கம் போவாருன்னு இன்னும் சரியான முடிவு தெரியாததால ஒரு குழப்பம் இருந்து கொண்டேதான் இருக்கு. கேப்டன் அம்மாவோட போனா மருத்துவர் அய்யா கலைஞரோடதான் போகனும், அவருக்குதான் கேப்டனை பிடிக்காதே. கிட்டதட்ட பாமக திமுகவொடதான் சேரும். அப்படின்ற மாதிரி பேப்பர்ல வந்தாலும், மருத்துவர் அய்யாவுக்கு திமுகவை விட்டா வேறு வழி இல்லைன்னு ஆனா திமுக அது இஷ்டத்துக்குதான் சீட் கொடுக்கும். ஆனா மருத்துவர் 50 சீட் வேணும்னு இன்னும் பேட்டி கொடுக்கிறார்.

இதுல என்ன பிரச்சினைன்னா மருத்துவர் அய்யா தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யற கட்சியோடத்தான் கூட்டணின்னு தெளிவா சொல்றார், அப்படிப்பார்த்தா தனியா நிப்பாரோன்னு ஒரு சந்தேகம் வருது. ஏன்னா தமிழ்நாட்டுக்கு நல்லது செய்றதுன்னா அது ஈழத்தமிழருக்கு செய்த மாதிரி, ஆயிடக்கூடாதேன்னு ஒரு அச்சம் அவ்வளவுதான்.

நம்ம ஈவிகேஸ் என்னன்னா இன்னமும் கூட்டணி பற்றி தெளிவாயிட்டாரான்னு தெரியல, டெல்லியில் இருந்து வர்றவுங்க எல்லாம் காங்கிரஸ் திமுக நல்லாதான் இருக்கோம்னு சொல்லிகிட்டே இருக்காங்க அதனால என்ன நடக்குமோன்னு ஒண்ணும் புரியாமல் இருந்த நிலைமாறி, காங்கிரஸ் ஓண்ணும் மாறப்போறதில்லேன்னுதான் தோணுறது.

பொங்கல் முடிஞ்சு போச்சு இனி தேர்தல் கூத்து தொடங்கனும், அதுக்கு முன்ன கூட்டணி முடிவாகனும் அதுக்கப்புறம் வேட்பாளர்கள் என்று ஒரு பெரிய கூத்தெல்லாம் இருக்கு, இதுல நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெளிவா சொல்லிட்டார், எனக்கு காங்கிரஸை எதிர்க்கனும் அதனால அம்மாவுக்குத்தான் ஆதரவு அப்படின்னுட்டு, அவர் இன்னும் கொஞ்சம் நல்லா சொல்லனும், அவர் காங்கிரஸ் நிக்கிற இடத்துல மட்டும் நான் எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்னு சொல்வாரோ என்னவோ.

அம்மா இப்போ பல பிரச்சினைகள் பற்றி அறிக்கை ஆர்ப்பாட்டம்னுட்டு செம பிஸியாயிட்டாரு, அதனால தமிழினத்தலைவருக்கு கொஞ்சம் யோசனைதான், ஆனாலும் போன இடைத்தேர்தல்ல கலக்கினமாதிரி ஜெயிக்கிற கலை அவருக்கு நல்லா தெரியும். அதனால கொஞ்சம் தைரியம்கூட இருக்கும்னு நினைக்கிறேன்.

சபரிமலையில 102பேர் இறந்துபோனது மிக சங்கடமான சம்பவமாகி போய்விட்டது, கேரள அரசு வேகமா செயல்பட்டதாதான் தோணுது, ஆனாலும் எதிர்கட்சியும் ஆளும்கட்சியும் மாத்தி மாத்தி குற்றம் சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க, கூட்டமான இடத்துக்குப்போகும் போது கொஞ்சம் நல்ல பாதை வழியாக போனா நல்லது, இது ஏதோ குறுக்கு பாதை என்பதால் சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்திருக்குன்னு கேரள நண்பர்கள் எல்லாம் சொல்றாங்க.

அமெரிக்கா ரொம்ப குழம்பிப்போய்தான் இருக்குன்னு தோணுது, எல்லாம் நம்ம பக்கத்து வீட்டு சீனாவோட வளர்ச்சிதான், ஆளில்லா விமானம், போர் விமானம்ன்னு அவங்க பாட்டுக்கு சொந்தமா கண்டு பிடிச்சு உண்டாக்கிகிட்டே இருந்தா சங்கடம் வராதா என்ன? பின்ன அமெரிக்கா தயாரிச்சதை எல்லாம் என்ன பண்றதாம், கூடவே சீனா அந்த பக்கமா பசுபிக் கடல் வழியா ஒரு தும்மு தும்முனா அமெரிக்காவுல சளிபிடிக்குமே, சீனா என்ன ஈராக் ஈரான் ஆப்கான் போல எட்டி உள்ள நாடா? அமெரிக்கா எவ்வளவு அடிச்சாலும் திருப்பி அடிக்க முடியாத தூரத்தில இருக்கிறதால, பாதுகாப்பா அவங்க பக்கத்து நாட்டுல போய் உக்காந்துகிட்டு அடிக்கலாம். சீனாவும் வட கொரியாவும் அப்படியில்லையே. ஒரு ராக்கெட் விட்டா அவங்களும் திருப்பி அமெரிக்கா மேலேயே விடுவாங்களே.

ஆனா இந்த மாதிரி நிலைபோனா நமக்கும் பிரச்சினைதான், சீனா நம்ம தலைமேல உக்கார்ந்து இருக்கே.

“நல்லதோர் வீணை செய்தே நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவ சக்தி,

எணை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாரோயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே”

இந்த பாட்டு யார் பாடினார்ன்னு எல்லாருக்கும் நல்லா தெரியும், ஆனா அதன் உள்ளே உள்ள சம்பவம் புரியுதா? கொஞ்சம் யோசிச்சிங்கன்னா தெரியும். ஒருத்தன் நான் பெரிய அறிவாளின்னு சொல்லிக்கமாட்டான் ஏன்னா அப்படி சொல்லமுடியாதுன்னு அவன் மனசாட்சிக்கு தெரியும். அப்படி சொல்லனும்னா அவன் ஒண்ணு பைத்தியமாய் இருக்கனும் இல்லை நிஜமாவே அப்படி இருக்கனும்.

இதுல பாரதியார் யாரு? இத்தனை சுடர்மிகும் அறிவு இருந்தும் வல்லமை கேட்க சிவசக்தி கிட்டதான் போகவேண்டி இருக்குன்னும் எடுத்துக்கலாம், இந்த மாநிலம் பயனுற வாழனும், எவ்வளவு பெரிய வார்த்தை பயனுற வாழ்தல் என்பது. சாதாரண விஷயம் இல்லை அதிலும் மாநிலம் பயனுற வாழ்தல், என்பது ஏதோ தமிழ்நாடு மாநிலம்னு நினைச்சு பாரதியை சின்ன ஆளா ஆக்கிடாதீங்க பெரிய நிலம் என்கிற பொருளில் அது உலகத்தை குறிக்கிறது. இந்த உலகமே பயனுற வாழனும்னு ஒருத்தன் நினைக்கிறது எவ்வளவு பெரிய ஆசை அதை நிறைவேத்த சுடர்மிகு அறிவு மட்டும் போதாது இறை அருளும் வேண்டும்னு பாரதி நினைக்கிறார்.

இதுல சாமிக்கு அறிவுரை வேறு நல்ல வீணையை செய்து அதைக்கொண்டுபோய் இப்படி புழுதியில எறிவாங்களான்னு. பாரதி படத்தில் ஒரு காட்சி வரும். குழந்தைக்கு உடம்பு சரியில்லாம இருக்கும்போது பராசக்தியிடம் வேண்டுவார், “வைத்தியனிடம் கொடுக்க காசு இல்லை, இப்படி உப்பு புளி பிரச்சினையில் என்னை போட்டு உழட்டினால் நான் நாத்திகனாகிவிடுவேன்” என்று எத்தனை கர்வம் உரிமை புலம்பல் எனக்கு ஆயிரம் கடமைகள் இருக்கின்றது என்ற உணர்ச்சி, அதுதான் பாரதி.

தவநெறிச்செல்வன்

Jan 4, 2011

சென்னை புத்தகக் காட்சி 2011

சென்னை புத்தகக் காட்சி 2011 நாளை செவ்வாய்க்கிழமை [04.01.2011] மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. எப்போதும் நடக்கும் அதே சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே.
17.01.2011 வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வேலை நாள்களில் மதியம் 2.00 மணிக்குத் தொடங்கும். இரவு 8.30 வரை கண்காட்சி நடைபெறும். விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முடிந்தவர்கள் சென்று புத்தகங்களை வாங்கி வரவும், எந்த புத்தகம் வாங்கினாலும் நல்லதுதான், படிக்கிற பழக்கம் வளரவேண்டும். புதிதாக படிக்க தொடங்குபவர்கள், வரலாறு சார்ந்த நாவல்களை தொடங்கினால் சுவாரஸ்யமாக இருக்கும், சமூக நாவல்களும் வாங்கலாம்.
ஒருமுறை கண்காட்சி திடலுக்கு சென்றாலே நிறைய தோன்றலாம்.
தவநெறிச்செல்வன்

Jan 1, 2011

சிறுநீரக கல் நீக்க அருமையான கை வைத்தியம்.

நண்பர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பியது அப்படியே கொடுத்திருக்கிறேன்



காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர்
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.



அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.