Aug 11, 2008

ஒரு உளறல்

மெல்ல இதை எழுதிக்கொண்டிருக்கும்போது தோன்றும் சம்பவங்களின் தொகுப்பாக இந்த உளரல் இருந்துவிடும் என்று தோன்றுகிறது, மனிதன் தன் ஒவ்வொரு நிலையிலும் ஒரு தேவையை நோக்கிய பிரயாணத்தில் இருக்கிறான் அதன் காரணமாக அவன் பயணம் ஒரு பதற்றமான சூழலில் இருக்கிறது அதன் பதற்றத்தை அடையாளம் காணப்படும் ஒரு முயற்சி இது ஆனால் இது தீர்வென்று சொல்வத்ற்கில்லை ஏனெனில் இதுவும் ஒரு பதற்றத்தின் வெளிப்பாடே.

மதுரை ஸ்ரீ சோமப்பா சுவாமிகள் சமாதி

எனது மூன்று வயது மகள்

எனது மூன்று வயது மகள்

என்னோடு பேச மறுக்கிறாள்

நான் வம்படியாக தூக்கினாலும்

விலகிக்கொண்டு வெறுப்பாய் பார்க்கிறாள்

அம்மாவே உலகம் என்று ஆகிக்கிடந்தவள்

சுவரின் மூலையில் சோர்ந்து கிடக்கிறாள்

என் இரண்டாவது மகள் பிறந்து

இரண்டு வாரம்தானே ஆகிறது

என்ன செய்ய

சின்ன தங்கையின் சிறு விரல் தொட்டு

சிரித்துக்கொள்கிறாள்

நான் தொட்டு தூக்கும் போது

தள்ளி நின்று

தான் யாரோவாகிப்போனதாய்

மெல்ல என் தலையணையில் தலைவைத்து

படுத்துக்கொள்கிறாள்

என்ன செய்வது

என் கண்களில் கசியும் கண்ணீர்துளிகள்

அவள் காயம் ஆற்றுமா?